மதிய உணவிற்கு ராமாபுரம் அரசமரம் பக்கத்தில் உள்ள செல்வி அம்மாள்
பாரம்பரிய உணவகத்திற்கு செல்ல நேரிட்டது. அரச மரம் ஜங்சனில் இருந்து
நெசப்பாக்கம் எம்ஜிஆர் சிலை செல்லும் சாலையில் வலதுபுரம் அய்பாகோ ஐஸ்கிரீம்
கடையை ஒட்டிய சந்தில் அமைந்துள்ளது இவ்வுணவகம்.
இவ்விடம் பெண்கள்
மட்டுமே சமையல். மறைவாக இல்லாமல் சமையலறை பார்வையில் படும்படி
அமைத்திருந்தனர். உள் நுழையும் போதே ஒருவர் பறப்பன முதல் நடப்பன வரை வறுவல்
சுக்கா என கிண்ணங்களில் வைத்திருந்தார்.
நான் பார்த்தவரை மீன் வறுவல், சிக்கன், நாட்டுக் கோழி, மட்டன் மற்றும்
கடம்பா சுக்கா ஆகியன இருந்தன. அவரிடம் சென்று டோக்கன் வாங்கி கொண்டு,
சாப்பாடும்(70₹) சிக்கன் சுக்காவும் (50₹) வாங்கிய பின் சாப்பிட
உட்கார்ந்தேன். இறால் தொக்கு வாங்கலாமென நினைத்திருந்தேன், ஆனால் இன்று
கிட்டவில்லை.
சாப்பாடு
முறுங்கை காய் சாம்பார், ரசம், மோர், கோசு கூட்டு, கோவைக்காய் பொறியல்
மற்றும் அளவான சோறுடன். முதலில் சாம்பார் மற்றும் காய்கறியுடன் சில
வில்லைகள். அபாரமான சாம்பார், ஆனால் காய்கறிகள் பரவாயில்லை. பிறகு சிக்கன்
சுக்கா குழம்புடன் சில வில்லைகள். சிக்கன் சிறிது காரத்துடன, அபாரம் என்று
கூற முடியாது...ஆனால் வீட்டில் சமைத்ததை போன்று எண்ணை அதிகமில்லாமல் அதிக
துண்டுகளுடன் நன்றாகவே இருந்தது. பின்னர் ரசம் மற்றும் மோருடன் உண்டு
முடித்தேன். ரசத்தை விட மோர் சுவையாக இருந்தது.
உணவகத்தில் இருந்து
வெளிய வந்தால், வாசலில் சிறு கடை அமைத்து லஸ்ஸி மற்றும் தாமரை, சோற்று
கற்றாலை, நெல்லிக்காய் அல்லது எலுமிச்சை சாறு கலந்த கரும்புச்சாறு விற்றுக்
கொண்டிருந்தனர். எலுமிச்சை மற்றும் இஞ்சி கலந்த கரும்புச்சாறு (20₹)
வாங்கி வயிற்றில் மிச்சம் இருந்த இடத்தை நிறப்பிவிட்டு கிளம்பினேன்.
குடும்பத்துடன் செல்ல சிறந்த இடம் அல்ல. ஆனால் வயிற்றிற்கும் பர்ஸிற்கும்
பாதிப்பு ஏற்படுத்தாத வீட்டு சாப்பாடு சாப்பிட சிறந்த கடை என்பதை மறுக்க
இயலாது.
கூகிளாண்டவர்:









