மதிய வேளை. செம்ம பசி. ஒரு நல்ல அசைவ சாப்பாடு கட்டனும் என்று முடிவாயிற்று. ஆனால் எங்கு செல்வதென்று குழப்பம். அஞ்சப்பர், பொன்னுசாமி எல்லாம் முன்ன மாதிரி இல்லை. குமார் மெஸ் போகலாமென்றால் பில்'லுல தாளிச்சிடுவாய்ங்க. கம்மியா செலவாகனும் ஆனால் திருப்தியா சாப்பிடனும். கூகிள் மேப்பில் நம்ம ப்ரேவெட் லிஸ்டில் உள்ள உணவகங்களை தேடிய போது கண்ணில் பட்டது "கறி பாக்ஸ்". பல நாட்களாக செல்ல நினைத்த உணவகம் இன்று தான் வாய்த்தது.
அண்ணா நகர் கோபுரம் மெட்ரோ ஸ்டேஷன் பின்புறம் உள்ள ஒன்றாவது தெருவுல் அமலா மெஸ்ஸுக்கு பக்கத்தில் அமைந்துள்ளது கறி பாக்ஸ். கால் மணி நேர காத்திருப்பிற்கு பிறகே நமக்கு அமர இடம் கிடைத்தது.
ஸ்பெசல் அசைவ சாப்பாடு (250₹) மற்றும் இறால் 65 பிரியாணியும் (180₹) ஆர்டர் செய்தோம். இங்கு நீர் அருந்தும் குவளை முதல் சாப்பிட தட்டு வரை எல்லாமே மண் பாண்டங்களே.
கேசரி, புடளை கூட்டு, உருளை கிழங்கு வருவல், சிக்கன் 65, மட்டன் சுக்கா, சிக்கன் குழம்பு, அவித்த முட்டை, அப்பளம், ரசம், மோர் மற்றும் அளவில்லா சோறு. என்னால் எல்லாத்தையும் டிரை பண்ண முடியவில்லை.
கேசரி அளவான இனிப்பு நல்ல ப்ளேவர். சிக்கன் குழம்பு செம்ம காரம். ஆனால் சரியான டேஸ்டு. சிக்கன் 65 சூடே இல்லை ஆனால் வழக்கமான சுவை. மட்டன் சுக்கா ஒவ்வொன்றும் சின்ன சின்ன பீஸ் நல்லா மசாலாவோட அல்டிமேட். ரசமும் நன்று. மோர் சாதம் சாப்பிட வயிற்றில் இடமில்லை.
சீரக சம்பாவில் செய்த பிரியாணியில் அவித்த முட்டையும் பொறித்த இறால்களும் வைத்து வெங்காய பச்சடி மற்றும் சிக்கன் குழம்புடனும் தந்தனர். 12-15 சிறு இறால்கள் 65 மசாலாவுடன் பொறிட்டது. சென்னையில் நூற்றி என்பது ரூபாயில் நல்ல ராட்டு பிரியாணி வேறு எங்கும் கிடைக்குமா என்று தெரியவில்லை. அதுவும் இங்கு கிடைக்கும் ஸ்பெசல் சாப்பாடு. கண்டிப்பாக நம்பி வரலாம். சொல்ல மறந்துவிட்டேன் இங்கு மதியத்திற்கு அயிரை மீன் குழம்பு கிடைக்கும்.
கூகிள் வழிகாட்டி:
Saturday, November 2, 2019
Friday, October 25, 2019
நல்லி பிரியாணி at Star Biriyani
இரவு நேரம். அலுவலகத்தில் ஓர் மூலையில் அமர்ந்து மின்திரையையே விழித்து பார்த்து கொண்டிருந்தேன். திடீர் என அந்த வார்த்தை என் காதில் ஒலித்தது. அது "பிரியாணி". எல்லாருக்கும் ஒவ்வோர் breaking point இருக்கும். என்னுடைய breaking point பிரியாணி. சகாக்கள் இருவர் இரவு உணவிற்கு ஆம்பூர் ஸ்டார் பிரியாணி செல்வதென்று பேசிக்கொண்டு இருந்தனர். வீட்டிற்கு சென்று எப்பொழுதும் சாப்பிடும் தோசையை சாப்பிட வேண்டுமே என நொந்து கொண்டிருந்த எனக்கு அந்த சொல் இன்ப அதிர்ச்சியை கொடுத்தது.
அடுத்த சில நிமிடங்களில் ராமாபுரம் ஸ்டார் பிரியாணி உணவகத்தில் மூவரும் வந்து அமர்ந்தோம்.
மட்டன் பிரியாணி காலி என ஆர்டர் எடுத்த பாய் பெரும் மன உளச்சலை கொடுத்தார். ஆனால் சிக்கன் பிரியாணியை உண்ண உடன் வந்த சகாக்களுக்கு விருப்பம் இல்லை. உடனே நம்ம பாய் தமிழனின் புதிய படைப்பான "நல்லி பிரியாணி" இருக்கு என கூற சற்றும் தாமதிக்காமல் ஆர்டர் செய்தோம். பன்னீர் கோலிசோடா(25₹) ஒன்றும் வரவழைக்கப்பட்டது.
பெரிய வாழை இலையில் கத்தரிக்காய் தொக்கும் வெங்காய பச்சடியும் வைத்தனர். பிறகு வந்தது நம்ம ஹீரோ. இருநூற்று என்பது ரூபாயில் மூன்று நல்லி பீஸ்களுடன் பிளேட் நிறைய சீரகசம்பா பிரியாணி. பார்த்தவுடன் டாக்டர் பட்டம் கிடைத்த மாதிரி மகிழ்ச்சி. 😁
சிக்கன் பிரியாணி சட்டியில் இருந்து எடுத்த பிரியாணி அரிசியை சிறிது மசாலா உடன் கலந்த நல்லியுடன் பரிமாறினர். கத்தரி தொக்கும் பச்சடியும் பிரியாணி சுவையை மேலும் உயர்த்தியது. நல்லியோ தாறுமாறு flavor. அதுவும் போன் மேரோவை உறிஞ்சி சாப்பிட அலாதி சுவை. என்ன மசாலாவில் காரம் தான் கொஞ்சம் அதிகம். சரி அதுக்கு தான் நமக்கு கோலிசோடா இருக்கே. உண்மையை சொல்லனும் என்றால் மட்டன் பிரியாணியை விட நல்லி சுவையில் ஒரு படி மேல்.

Sunday, September 1, 2019
லெட்சுமி கிருஷ்ணா பால் பண்ணை
மதுரையில் அதிகாலை இரண்டு மணிக்கும் ரோஸ்மில்க் கிடைக்கும் இடம் தான் இந்த லெட்சுமி கிருஷ்ணா பால் பண்ணை. பெரியார் பேருந்து நிலையம் பக்கம் அமைந்திருக்கும் இவ்விடத்தில் ரோஸ் மில்க் தவிர பாதாம் பால், பால் கோவா என பல உண்டு. எப்போதும் மக்கள் கூட்டம் அலை மோதும்.
சித்தப்பா பசங்களோட ஒரு நடை போனப்ப ரோஸ் மில்க்(25₹) மற்றும் பாதாம் பால்(35₹) bottoms up. தரமான பால். நாக்கில் எச்சில் ஊர வைக்கும் சுவை. மதுரை வந்தால் கண்டிப்பாக மிஸ் செய்யக்கூடாத ஒன்று.
கூகிள் வழிகாட்டி:
மதுரை சங்கம் சகா
பல நாட்களாக செல்ல நினைத்த உணவகம். மதுரை கேகே நகரில் அப்போலோ மருத்துவமனை அருகில் அமைந்துள்ளது "சங்கம் சகா". இந்த முறை மதுரை வருகையால் கிடைத்த நன்மைகளில் ஒன்று.
உள்ளே சென்று அமர்ந்ததும் இனிப்பும் புளிப்புமான பானகம் ஒரு சிறிய மண் குவளையில் கொடுத்தார்கள். பல வருடங்களுக்கு முன் சிறு வயதில் அழகர் திருவிழாவில் குடித்தது. சுவையாக இருந்தது. முடிந்தால் இரண்டு ரிப்பீட் கேளுங்க, ஏன்னா திரும்ப இது எப்ப கிடைக்கும் என்று கூற இயலாது. பிறகு இந்த உணவகத்தையும் அவர்கள் தரும் பாரம்பரிய உணவுவகைகள் பற்றியும் கூறினார்கள். அதன்பிறகு நன்னாரியும் சீரகமும் சேர்த்த தண்ணீர் வைத்தனர். நல்ல வாசனையான herbal நீர்.
ஆரம்ப உணவாக அரண்மனை கோழி (135₹), கறி கோலா உருண்டை(30₹) மற்றும் கயல் கோலா உருண்டையும் (30₹) வரவழைத்தோம். அரண்மனை கோழி நல்ல மொறு மொறுவென எண்ணையில் பொறித்தது, வேர்கடலை வேறு டாப்பிங்காக போட்டிருந்தனர், கிட்டத்தட்ட kfc டேஸ்ட், அட்டகாசம். என்ன இரண்டே பீஸ்தான். இரண்டு ரிப்பீட் சொல்ல வேண்டியதாகிவிட்டது. கறி மற்றும் கயல்(மீன்) கோலா எப்பவும் போல நன்றாக இருந்தது. பின்னர் வஞ்சிரம் வருவல் பழம்புளி சட்னியுடன்(175₹) 👌👌👌
மெயின் உணவாக (ஓலை)பெட்டி புலால் சோறு(மட்டன்) மற்றும் மூங்கில் ஊன் சோறு(நாட்டுக்கோழி). எப்பவும் கிடைக்கும் பிரியாணி போல் இல்லாமல் கறி வறுவல் சமைத்த சட்டியில் சாதத்தை இட்டு கிளறியது போன்ற அருமையான சுவை. மட்டன் இருந்ததால் புலால் சோறு ஊன் சோற்றை விட சுவை மிகுந்ததாக இருந்தது. தொட்டுக்க தயிர் வெங்காய பச்சடி just perfect combo.
கடைசியாக இளநீர் அமிர்தம்(95₹) மற்றும் சூடான பருத்திப் பால் அல்வா(80₹). அல்வாவை வாயில் இட்டதும் கரைந்தது புது உணர்வை தந்தது என்றால் மிகையில்லை. இளநீர் அமிர்தம் மேற்புறம் புட்டிங் போன்றும் கீழே ஜெல்லி போன்றும் இருந்தது. இளநீரில் உள்ள இளம் தேங்காயை வெட்டி சிறு சிறு துண்டுகளாக மேலே இருந்தது. இங்கு வந்தால் "இளநீர் அமிர்தம்" கண்டிப்பாக மிஸ் செய்யாதீர்கள்.
கூகிள் வழிகாட்டி:
Saturday, August 24, 2019
தஞ்சாவூர் மிலிட்டரி ஓட்டல்
ஜார்ஜ் டவுனை சுற்றி சில பல வேலைகளை முடித்து விட்டு மதிய வேளையில் நல்ல பசியுடன் தஞ்சாவூர் மிலிட்டரி ஓட்டல் எனப்படும் கட்டையன் செட்டியார் ஓட்டலுக்கு நானும் நண்பரும் வந்தடைந்தோம். கந்தகோட்டம் கோயிலில் இருந்து இருநூறு மீட்டர் தொலைவில் ராசப்ப செட்டி தெருவில் அமைந்திருக்கிறது இந்த பழமையான உணவகம்.
அதிகபட்சம் ஆறு பேர் தான் உட்கார்ந்து சாப்பிட முடியும். விறகு அடுப்பு சமையல் தான். மட்டன் புலவும் கறி தோசையும் ஆர்டர் செய்தோம். முதலில் வந்தது மட்டன் புலவு(170₹). கடினமான கறி. சற்று வித்தியாசமான புலவு. நிறைய பேருக்கு பிடிக்க வாய்ப்பில்லை. அதன் மேல் ஊற்றிய குழம்பு சற்று subtleஆன சுவை. இரண்டு பேரும் ஷேர் செய்ததால் சீக்கிரம் முடித்து விட்டோம்.
அடுத்து வந்தது கறி தோசை(140₹), நாங்கள் இவ்வளவு தூரம் வந்ததுக்கு காரணமே அதுதான். நல்ல பெரிய தோசை. அதுக்கு குடுத்த க்ரேவி எங்களை 90'களுக்கு கூட்டிச் சென்றது. ஆம் அப்படி ஒரு காரமும் சுவையும் மிகுந்த க்ரைவியை சென்னையில் சாப்பிட்டு பல பல வருடங்கள் ஆகிவிட்டது. சுடச்சுட கறி தோசையை க்ரேவியில் தொட்டு சாப்பிட, ஆகா அபாரமான சுவை. சென்னையில் மிஸ் பண்ண கூடாத சுவைகளில் இந்த ஓட்டல் கறி தோசை கண்டிப்பாக இடம்பெறும்.
கூகிள் வழிகாட்டி:
Tuesday, August 13, 2019
அப்பா மெஸ்
மதுரையில் பரோட்டா சாப்பிட்டவங்க சென்னையில் பரோட்டா சாப்பிடவே
ஒன்றுக்கு ரெண்டு வாட்டி யோசிப்பார்கள். அப்படியில்லாமல் பரோட்டாவுக்கெனவே
சிறந்த உணவகங்களில் ஒன்றுதான் விருகம்பாக்கம் சாய் நகரில் அமைந்துள்ள
"அப்பா மெஸ்".
இரவு உணவுக்கு இந்த உணவகத்திற்கு செல்ல நேர்ந்தது. சிக்கன் வாழை இலை சுட்ட பரோட்டாவும்(160₹) கொத்து பரோட்டாவும்(100₹) ஆர்தர் செய்தோம்.
இரவு உணவுக்கு இந்த உணவகத்திற்கு செல்ல நேர்ந்தது. சிக்கன் வாழை இலை சுட்ட பரோட்டாவும்(160₹) கொத்து பரோட்டாவும்(100₹) ஆர்தர் செய்தோம்.
வாழை இழையில் இரண்டு
பரோட்டாவும் இரண்டிற்கும் நடுவில் சிக்கன் கறி வைத்து கொழம்பும் ஊற்றி
வாழைநாரால் கட்டி விடுவார்கள். ஆர்டர் வந்த பிறகு சூடான தோசைக்கல்லில்
கட்டிய வாழை இலையை வைத்து சுற்றி தண்ணீர் தெளித்து சுடச்சுட நமக்கு
தந்தார்கள். பரோட்டா சிக்கன் குழம்பில் ஊரி செம soft. இதுக்காகவே அடிக்கடி
இங்க வரலாம் போல. திரும்பி பார்த்தால் எல்லா டேபிலிலும் இததான் ஆர்டர்
பண்ணியிருந்தனர். என்ன மூனே மூனு சிக்கன் பீஸ்தான் இருந்தது, அதுவும்
எழும்புதான் அதிகம். இந்த மாதிரி மட்டன், நாட்டு கோழி, குடல் மற்றும்
தலைக்கறியுடனும் கிடைக்கும்.
கொத்து பரோட்டாவும் நன்றாகவே இருந்தது. தொட்டுக்க வெங்காய பச்சடியும் மட்டன் கொழம்பும் தந்தனர். கடைசியாக ஒரு பன்னீர் கோலி சோடா (25₹) ஒரே மடக்கில் முடிந்தது.
விலாசம்:
7, 1st Main Rd, Sai Nagar, Virugambakkam, Chennai - 600092

மயிலை பாரதி மெஸ்
ஞாயிறு காலை வேளை மயிலை கற்பகாம்பாள் மற்றும் கபாலீஸ்வரர் கோயிலில்
தரிசனம் முடித்துவிட்டு பசியுடன் பொன்னம்பல வாத்தியார் தெருவில் நல்ல
உணவகம் நோக்கிய தேடல். ஜன்னல் கடைக்கு முன்பாக நின்றேன். ஆனால்
குழந்தையுடன் உட்கார்ந்து சாப்பிட வேண்டும் என்பதால் எதிரில் அமைந்துள்ள
பாரதி மெஸிற்குள் சென்றோம்.
பல வருடங்களுக்கு முன் திருவள்ளிக்கேணி பாரதி மெஸ்ஸில் நண்பர் மோகனுடன் அடிக்கடி உணவருந்துவது உண்டு. வயிற்றுக்கு எந்த பாதகமும் செய்யாத உணவு. உணவகத்தின் உரிமையாளர் மகாகவி பாரதியாரின் பக்தர். உணவகம் முழுவதும் பாரதியின் புகைப்படங்கள் மற்றும் அவரைப் பற்றிய குறிப்புகள்.

இட்லி ரெடியாக நேரமாகும் என்பதால் பொங்கல்(40₹), சிறுகீரை தோசை(38₹)
மற்றும் மெது வடை(15₹) வரவழைத்தோம். சாம்பாரும் மூன்று வகையான சட்னியும்
(தேங்காய், தக்காளி, புதினா) ஒவ்வொரு டேபிளிலும் வைக்கப்பட்டிருந்தது. குறை
என்று சொல்ல ஒன்றும் இல்லை. அனைத்துமே அருமை.
முன் வந்த பொங்கலையும் தோசையையும் சாப்பிட்டு முடிக்கவும் தட்டு இட்லி(45₹) ரெடியாகவும் நேரம் சரியாக இருந்தது. சரி அதை மட்டும் ஏன் விட்டு வைக்கணும் என்று ஒரு ப்ளேட் சொன்னேன். அகலமான இட்லி சிறு ப்ளேட்டில் வைத்து அதன் மேல் இட்லி பொடி தூவி நெய் விட்டு ஆவி பறக்க வந்தது. ஒரு விள்ளல் எடுத்து புதினா தேங்காய் சட்னியுடன் சாப்பிட வழுக்கிக்கொண்டு உள் சென்றது. நல்ல நெய் வாசம். சில நிமிடங்களில் இட்லி இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிட்டது.
கடைசியாக சுமிதி பால்(18₹) வந்தது. சுக்கு, மிளகு, திப்பிலி கலந்த சூடான பால் சுவைக்க அப்படியே வீட்டில் சுவைத்த மணம். அனைத்தும் சேர்ந்து மொத்தம் நூற்றி எழபத்தைந்து ரூபாய் மூவருக்குமான காலை உணவு. விலை அதிகமில்லை. மதியம் வந்தால் காய்கறி சாதம் சாப்பிட்டு பாருங்க. அத்துடன் மயிலை பயணத்தை முடித்து கொண்டோம்.

Subscribe to:
Posts (Atom)