இரவு நேரம். அலுவலகத்தில் ஓர் மூலையில் அமர்ந்து மின்திரையையே விழித்து பார்த்து கொண்டிருந்தேன். திடீர் என அந்த வார்த்தை என் காதில் ஒலித்தது. அது "பிரியாணி". எல்லாருக்கும் ஒவ்வோர் breaking point இருக்கும். என்னுடைய breaking point பிரியாணி. சகாக்கள் இருவர் இரவு உணவிற்கு ஆம்பூர் ஸ்டார் பிரியாணி செல்வதென்று பேசிக்கொண்டு இருந்தனர். வீட்டிற்கு சென்று எப்பொழுதும் சாப்பிடும் தோசையை சாப்பிட வேண்டுமே என நொந்து கொண்டிருந்த எனக்கு அந்த சொல் இன்ப அதிர்ச்சியை கொடுத்தது.
அடுத்த சில நிமிடங்களில் ராமாபுரம் ஸ்டார் பிரியாணி உணவகத்தில் மூவரும் வந்து அமர்ந்தோம்.
மட்டன் பிரியாணி காலி என ஆர்டர் எடுத்த பாய் பெரும் மன உளச்சலை கொடுத்தார். ஆனால் சிக்கன் பிரியாணியை உண்ண உடன் வந்த சகாக்களுக்கு விருப்பம் இல்லை. உடனே நம்ம பாய் தமிழனின் புதிய படைப்பான "நல்லி பிரியாணி" இருக்கு என கூற சற்றும் தாமதிக்காமல் ஆர்டர் செய்தோம். பன்னீர் கோலிசோடா(25₹) ஒன்றும் வரவழைக்கப்பட்டது.
பெரிய வாழை இலையில் கத்தரிக்காய் தொக்கும் வெங்காய பச்சடியும் வைத்தனர். பிறகு வந்தது நம்ம ஹீரோ. இருநூற்று என்பது ரூபாயில் மூன்று நல்லி பீஸ்களுடன் பிளேட் நிறைய சீரகசம்பா பிரியாணி. பார்த்தவுடன் டாக்டர் பட்டம் கிடைத்த மாதிரி மகிழ்ச்சி. 😁
சிக்கன் பிரியாணி சட்டியில் இருந்து எடுத்த பிரியாணி அரிசியை சிறிது மசாலா உடன் கலந்த நல்லியுடன் பரிமாறினர். கத்தரி தொக்கும் பச்சடியும் பிரியாணி சுவையை மேலும் உயர்த்தியது. நல்லியோ தாறுமாறு flavor. அதுவும் போன் மேரோவை உறிஞ்சி சாப்பிட அலாதி சுவை. என்ன மசாலாவில் காரம் தான் கொஞ்சம் அதிகம். சரி அதுக்கு தான் நமக்கு கோலிசோடா இருக்கே.
உண்மையை சொல்லனும் என்றால் மட்டன் பிரியாணியை விட நல்லி சுவையில் ஒரு படி மேல்.
கூகிள் வழிகாட்டி:



No comments:
Post a Comment