ஞாயிறு காலை அசோக் நகர் ஆஞ்சநேயரை தரிசித்து விட்டு வண்டியை எடுத்தால்
செம பசி. சுற்றிலும் சங்கீதா தெசி, குப்தா பவன், கிருஷ்ணா பவன் என சைவ
உணவகங்கள்.
திருச்செந்தூர் சென்று முருகனை தரிசித்தால் அடுத்து
செய்தாக வேண்டிய கடமை மணி அய்யர் மெஸ்ஸில் டிபன் சாப்பிடனும் என்று அங்கு
சென்றவர்கள் சிலாகித்து கேட்டதுண்டு. புதிதாக சென்னையில் அதுவும் அசோக்
நகரில் அவர்களின் கிளை ஆரம்பித்துள்ளனர் என்று அன்பர் கேபிள் சங்கர்
பிளாக்கில் பதித்த நியாபகம். சரி இன்று சுவைத்து பார்த்துவிடலாம் என்று மணி அய்யர் ஹோட்டல் செல்வதாக முடிவானது.
வண்டியை பார்க் செய்து விட்டு வந்து தரை தளத்தில் உள்ள சேரில் அமர்ந்தால்
நூறு ரூபாய்க்கு அன்லிமிடெட் டிபன் என்ற நோட்டீஸ் கண்ணில் பட்டது.
சர்வரிடம் கேட்டதர்க்கு முதல் மாடியில் தான் பஃபே என்றார். சரி என்று மினி
டிபன் (50₹) ஆர்டர் செய்தோம்.
மினி டிபன் பெயருக்கு ஏற்றார் போல் மினி வடையுன் வந்தது. ஒரு ஸ்கூப்
வென்பொங்கல், இட்லி, முறுகலான தோசை மற்றும் கொஞ்சம் கேரட் அல்வா. முதலில்
அல்வாவை ஒரு வில்லல் எடுத்து சுவைக்க... நெய் கலந்த தெய்வீகமான சுவை.
அரைத்து விட்ட சாம்பார், மூன்று வகை சட்னி, இட்லி பொடி, நல்லெண்ணெய்
மற்றும் சக்கரை(காபியில் கலக்க) என தேவையான condiments எல்லாம் டேபிளில்
ஏற்கனவே வைத்திருந்தனர். மகிழ்ச்சி. ஒவ்வொரு தடவையும் சர்வரை கூப்பிட
வேண்டிய அவசியமில்லை. அந்த வயதான சர்வர் பொடியை போட்டுக்கோங்கோ எண்ணையை
ஊத்திக்கோங்கோ என செம கவனிப்பு. பொடிக்கு தனியாக காசு வாங்கற உணவகங்களில்
கூட இப்படி சொல்ல மாட்டார்கள். என்னடா எல்லாமே நல்லா அமையுதே நம்ம வாழ்க்கை
இப்படி போகாதே என்று நினைத்த நொடி சற்று கடினமான இட்லி அகப்பட்டது.
சாம்பாரும் சட்னியும் நல்லா இருந்ததால் சாப்பிட முடிந்து. பொங்கலும்
தோசையும் நன்று.
கடைசியாக டபரா செட்டில் மினி ஃபில்டர் காபி சர்க்கரை
இல்லாமல் வந்தது. நாம் தான் சர்க்கரை போட்டுக்கொள்ள வேண்டும் போல். ஃபேஷ்
ஃபேஷ். அனைத்து டிபன் வகையறாவும் சுவைக்க ஐம்பது ரூவா சல்லி விலைதான். என்ன
இட்லி மட்டும் மிருதுவாக இருந்திருந்தால் இன்னும் சிறப்பாக
இருந்திருக்கும்.
முகவரி:
Hotel Tiruchendur Mani Iyer
31/69, 7th Ave, Sarvamangala Colony, Indira Colony, Ashok Nagar, Chennai
Sunday, January 19, 2020
Saturday, January 11, 2020
ஹோட்டல் பாண்டியாஸ்
வடசென்னையில் குறிப்பாக ஜார்ஜ் டவுன் ராயபுரம் ஏரியாக்களில் பிரியாணி
கேட்டால் புலாவ் மாதிரி ஒரு தேங்காய்பால் சோற்றுக்கலவை தருவார்கள். இன்று
அதை தென் சென்னையிலேயே சுவைக்க நேர்ந்தது.
மதிய உணவிற்கு வடபழனி ஃபோரம் மாலிற்கு அடுத்து அமைந்துள்ள பாண்டியாஸ் செல்ல நேர்ந்தது. கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்கு முன்பு வந்தபோது ஏசியெல்லாம் இருந்த மாதிரி நியாபகம் இல்லை. ஆனால் இப்பொழுது ஏசி, சைனீஸ், அரபியன், கிரில் என காலத்திற்கேற்ப மாற்றம்.
பாண்டியாஸுக்கு பழைய வண்ணாரப்பேட்டை மற்றும் ராயபுரத்தில் கிளைகள் உண்டு. ஸ்டார்டர்ஸ் எதுவும் சொல்லாமல் நேராக மட்டன் நல்லி பிரியாணி (280₹) மற்றும் சிக்கன் 65 பிரியாணி(280₹) என ஆர்டர் செய்தோம். முதலில் பெரிய வாழை இலையை வைத்தனர். இப்பெல்லாம் வாழை இலையை ஏசி ரெஸ்டாரண்ட்களில் பார்ப்பதே அரிதாகிவிட்டது.
மீடியம் சைஸ் பாஸ்மதி அரிசியில் தேங்காய்பால் ஊற்றி தனியா சற்று தூக்கலாக இட்டு சமைத்த சற்று குழைவாக பச்சை நிறத்தில் இருந்தன இரண்டு வகை பிரியாணிகளும். காரம் என்பது பேச்சுக்கு கூட கிடையாது. இதை மதுரையில் தேங்காய் சோறு என்பார்கள். கண்டிப்பாக மதுரைக்காரர்கள் இதை பிரியாணி என ஒத்துக்கொள்ள மாட்டார்கள். சற்று வித்தியாசமான சுவை. பெங்களூரில் மட்டன் புலாவ் சாப்பிட்டவர்கள் ரசித்து உண்பார்கள். உடன் நல்ல கட்டியான வெங்காய பச்சடியும் காரமற்ற சாப்ஸ் குருமாவும் வந்தன.
மட்டன் பிரியாணியில் இரண்டு சுற்றி கறியுடன் கூடிய நல்லி (மற்றும் வேக வைத்த முட்டை). என்ன பொதுவெளியில் சத்தமாக தட்டி சாப்பிடத்தான் கஷ்டமாக இருந்தது. சிக்கன் 65 பிரியாணியில் நாலு மீடியம் சைஸ் சிக்கன் 65 பீஸ்கள். நல்ல ஸாப்டான பீஸ்கள்.
கண்டிப்பாக இந்த ஸ்டையில் பிரியாணியை அடிக்கடி சாப்பிட முடியாது. கிஞ்சிற்றும் காரம் இலையெனில் நமக்கு செட் ஆகாது. ஆனால் குழந்தைகளுக்கு அருமையாக செட் ஆகும். வித்தியாசமான அதுவும் வடசென்னை ஸ்டெயிலில் உள்ள பிரியாணியை(முயல் உட்பட) சுவைக்க தரமான இடம்.
முகவரி:
Hotel Pandia's
189, Arcot Rd, Opposite Kamala Theatre, Vadapalani, Chennai

Subscribe to:
Comments (Atom)