Tuesday, August 13, 2019

அப்பா மெஸ்

மதுரையில் பரோட்டா சாப்பிட்டவங்க சென்னையில் பரோட்டா சாப்பிடவே ஒன்றுக்கு ரெண்டு வாட்டி யோசிப்பார்கள். அப்படியில்லாமல் பரோட்டாவுக்கெனவே சிறந்த உணவகங்களில் ஒன்றுதான் விருகம்பாக்கம் சாய் நகரில் அமைந்துள்ள "அப்பா மெஸ்".



இரவு உணவுக்கு இந்த உணவகத்திற்கு செல்ல நேர்ந்தது. சிக்கன் வாழை இலை சுட்ட பரோட்டாவும்(160₹) கொத்து பரோட்டாவும்(100₹) ஆர்தர் செய்தோம்.






வாழை இழையில் இரண்டு பரோட்டாவும் இரண்டிற்கும் நடுவில் சிக்கன் கறி வைத்து கொழம்பும் ஊற்றி வாழைநாரால் கட்டி விடுவார்கள். ஆர்டர் வந்த பிறகு சூடான தோசைக்கல்லில் கட்டிய வாழை இலையை வைத்து சுற்றி தண்ணீர் தெளித்து சுடச்சுட நமக்கு தந்தார்கள். பரோட்டா சிக்கன் குழம்பில் ஊரி செம soft. இதுக்காகவே அடிக்கடி இங்க வரலாம் போல. திரும்பி பார்த்தால் எல்லா டேபிலிலும் இததான் ஆர்டர் பண்ணியிருந்தனர். என்ன மூனே மூனு சிக்கன் பீஸ்தான் இருந்தது, அதுவும் எழும்புதான் அதிகம். இந்த மாதிரி மட்டன், நாட்டு கோழி, குடல் மற்றும் தலைக்கறியுடனும் கிடைக்கும்.




கொத்து பரோட்டாவும் நன்றாகவே இருந்தது. தொட்டுக்க வெங்காய பச்சடியும் மட்டன் கொழம்பும் தந்தனர். கடைசியாக ஒரு பன்னீர் கோலி சோடா (25₹) ஒரே மடக்கில் முடிந்தது.




விலாசம்:

7, 1st Main Rd, Sai Nagar, Virugambakkam, Chennai - 600092

கூகிள் வழிகாட்டி:

No comments:

Post a Comment