சென்னை ராமாவரம் டி.எல்.எப் வளாகத்திற்கு எதிரே அமைந்திருக்கும்
குமரகம் உணவகத்திற்கு இரவு உணவிற்காக அலுவலக நண்பருடன் செல்ல நேரிட்டது.
வழக்கம் போல சில ஆப்பங்களையும் (20₹) முட்டை கறியும் (70₹) கொண்டுவர
உத்தரவித்தோம். நண்பரோ சிக்கன் சாப்பிட மாட்டார். நானோ பல கோழி பண்ணைகளை
தின்றே அழித்தவன். ஆதலால் பொதுவான அபெடைசராக கறிமீன் பொழிச்சது(300₹) ஒன்றை
கேட்டுவிட்டோம். வந்த மீனின் அளவிற்கும் விலைக்கும் சம்பந்தமே இல்லை.
மிகச்சிறிய மீன். ஆனால் நல்ல மசாலாவுடன் வாழை
இலையில் சுற்றி தவாவில் நன்றாக வறுக்கப்பட்டு அட்டகாசமான சுவை. வாழை இலை
சுத்தமாக தொடைக்கப்பட்டது என்பதை சொல்லித்தெரிய வேண்டியதில்லை.
ஆப்பம் வழமையான சுவை. முட்டை கறி இரண்டு முழு முட்டைகளுடன் லேசான
புளிப்பான கிரேவி, இருவருக்கு சரியாக இருந்தது. இனி வந்தால் மீன் அளவை
தெரிந்த கொள்ளாமல் ஆர்டர் செய்யப் போவதில்லை என்று முடிவெடுத்து புகார்
தெரிவித்து விட்டு கிளம்பினோம்
கூகிள் வரைபடம்:
Thursday, December 14, 2017
Monday, December 11, 2017
மதுரை வெண்ணை ரொட்டி
மேல மாசி வீதியில் இருந்து பாண்டிய வெள்ளாளர் தெருவில் செல்கையில் தெற்கு வெளி வீதி சந்திப்பில் உள்ள ஒரு தேனீர் விடுதியில் மாலை நேரங்களில் சுடச்சுட வெண்ணை ரொட்டி (15ரூ) சமைத்து தரப்படும். இன்று மாலை இரண்டு வெண்ணை ரொட்டிகளை வீட்டிற்கு வாங்கினேன்.
ரொட்டியினை இரண்டாக வெட்டி நடுவில் வெண்ணையை தடவி பின்னர் சூடான கல்லில் வைத்து மேலும் கீழும் இன்னொரு முறை வெண்ணை தடவி ரெண்டு திருப்பு திருப்பி மேலாக சர்க்கரை வைத்து வாழை இலையில் கெட்டித்தந்தார்கள்.
வீட்டிற்கு சென்று சூடான வெண்ணை ரொட்டியினை ஒரு விள்ளல் எடுத்து சாப்பிட்டால் எ பியூர் பிளிஸ்

Sunday, December 10, 2017
ஏ.வி.கே வீட்டு சாப்பாடு மற்றும் மீன் உணவகம்
நண்பர்கள் குழுவுடன் உணவிற்காக சாலிகிராமம் நோக்கி ஒரு பயணம். பிரசாத் ஸ்டுதியோ பின்புறம் அமைந்திருக்கும் எல்.வி.பிரசாத் ரோட்டில் உள்ள ஏ.வி.கே மீன் உணவகத்திற்கு மதிய வேளையில் சென்றோம்.
கடை வாசலில் பலர் பார்சலுக்காக நின்றிருந்தனர். மிகச்சிறிய கடை. அங்கு அமர்ந்து சாப்பிட மூன்று டேபிள்கள் மட்டுமே உள்ளது. அதிகபட்சமாக பன்னிரன்டு பேர் மட்டுமே உட்கார்ந்து சாப்பிட முடியும். முக்கால் வாசி மக்கள் பார்சலுக்காக தான் வந்திருந்தனர். நாங்கள் நாலு பேரும் ஜன்னல் பக்கத்திலிருந்த டேபிளை தேர்வு செய்தோம்.
நாலு அளவு சாப்பாடு (70ரூ), வஞ்சிரம் வறுவல் (140ரூ) மற்றும் மத்தி வறுவல்
(4 பீஸ் 100ரூ) ஆர்டர் செய்தோம். மீன் விலை சந்தை விலையை பொருத்து
நாள்தோரும் வேறுபடும். ஒவ்வொறு நாளும் ஒவ்வொறு வகை மீன் கிடைக்கும்.
பெரும்பாலும் வஞ்சிரம் கிடைக்கும். நெறைய பேர் மீன் குழம்பும், மீன் வறுவல்
மட்டும் வீட்டிற்கு வாங்கி சென்றனர்.
சாதத்துடன் பீட்ரூத் கோஸ் பொரியல், கீரை கூட்டு மற்றும் அப்பளம் பறிமாரப்பட்டது. எடுத்த உடனே மீன் கொழம்பு தான் கேட்டோம். வஞ்சிரமும் மத்தி மீன் வறுவலும் சுடச்சுட அடுப்பில் இருந்த நேராக எங்கள் இலைகளுக்கு தாவின. இரண்டுமே நிறைவாக இருந்தன. பிறகு வஞ்சிரம் வறுவல் உடன் கொடுத்த மசாலாவை சாதத்துடன் சேர்ந்து சாப்பிட தாறுமாறு டேஸ்ட். கடைசியாக ரசம் விட்டு ஒரு பிடி படித்தோம்.
சாப்பிட்டு முடித்தவுடன் மோர் ஒரு கப் கொடுத்தார் உரிமையாளர் மகன். கூடவே விரைவில் ஏசி மயம் ஆக்கபோறோம்னு ஒரு தகவலும் தந்தார். வயிரும் மனமும் நிறைந்த மகிழ்ச்சியில் அங்கிருந்து விடை பெற்றோம்.

யானைக்கல் சுல்தான் உணவகம்
யதார்த்தமாய் ஒரு மதுரை பயணம். பல கனவுகளுடன் வந்த என்னை, நேற்று முழுவதும் மச்சான்கள் வீட்ல பறக்குறதும் நடக்குறதும் காரங்சாரமாக சமைச்சு சாய்ச்சுபுட்டாய்ங்க. அதனால இன்னைக்கு காலைலயே வீட்டவுட்டு கிளம்பிட்டேன் ஒரு பிளானோடு.
வந்த வேலைய முடிச்சுப்புட்டு மச்சானை அவரு கடைல பிக்கப்பண்ணிட்டு, மதிய உணவிற்கு வண்டிய கிளப்பினோம். மதியம் ஒரு மணியளவில் யானைக்கல்'ல உள்ள சுல்தான் கடைல வயிற்றில் பட்டாம்பூச்சிகள் பறக்க நுழைந்தோம்.
ஆளுக்கு ஒரு அரைப்பிளேட் மட்டன் பிரியாணி(145ரூ), சிக்கன் சுக்கா(70ரூ) மற்றும் மட்டன் சுக்கா(75ரூ) சொன்னோம்.
மட்டன் பிரியாணி சீரக சம்பா அரிசியில இளச்சூடாக நன்று வெந்த கொஞ்சம் கொழுப்பு நிறைந்த வெள்ளாட்டு கறியுடன் அருமையாக இருந்தது. அதனுடன் பரிமாரப்பட்ட கொழம்பும் மட்டன் எலும்பு தாழ்ச்சாவும் செம காம்பினேசன். கடைசியா ஒரு பிளைன் பிரியாணி (80ரூ) வாங்கினோம். பீஸ் இல்லயே தவிர அதுவும் மட்டன் பிரியாணி தான்.
மட்டன் மற்றும் சிக்கன் சுக்காவும் செமிகிரேவியா நாலைந்து பீசோட (எலும்புடன்) கொடுத்த காசுக்கு வொர்த்தா இருந்தது. சாயங்கால நேரத்துல பரோட்டாவும் சிக்கன் மஜுராவும் இங்க பிரபலம். சாப்பிட்ட பிறகு நாம தான் இலைய எடுத்து போடணும்.
இவர்கள் மாட்டுதாவணி பஸ் நிலையத்திற்கு எதிர்லயும் ஒரு கடை போட்டிருக்காங்க. மதுர வந்தா மறக்காம சாப்பிட்டு பாருங்க.
Subscribe to:
Comments (Atom)