Sunday, December 10, 2017

யானைக்கல் சுல்தான் உணவகம்


யதார்த்தமாய் ஒரு மதுரை பயணம். பல கனவுகளுடன் வந்த என்னை, நேற்று முழுவதும் மச்சான்கள் வீட்ல பறக்குறதும் நடக்குறதும் காரங்சாரமாக சமைச்சு சாய்ச்சுபுட்டாய்ங்க. அதனால இன்னைக்கு காலைலயே வீட்டவுட்டு கிளம்பிட்டேன் ஒரு பிளானோடு.


வந்த வேலைய முடிச்சுப்புட்டு மச்சானை அவரு கடைல பிக்கப்பண்ணிட்டு, மதிய உணவிற்கு வண்டிய கிளப்பினோம். மதியம் ஒரு மணியளவில் யானைக்கல்'ல உள்ள சுல்தான் கடைல வயிற்றில் பட்டாம்பூச்சிகள் பறக்க நுழைந்தோம்.




ஆளுக்கு ஒரு அரைப்பிளேட் மட்டன் பிரியாணி(145ரூ), சிக்கன் சுக்கா(70ரூ) மற்றும் மட்டன் சுக்கா(75ரூ) சொன்னோம். 




மட்டன் பிரியாணி சீரக சம்பா அரிசியில இளச்சூடாக நன்று வெந்த கொஞ்சம் கொழுப்பு நிறைந்த வெள்ளாட்டு கறியுடன் அருமையாக இருந்தது. அதனுடன் பரிமாரப்பட்ட கொழம்பும் மட்டன் எலும்பு தாழ்ச்சாவும் செம காம்பினேசன். கடைசியா ஒரு பிளைன் பிரியாணி (80ரூ) வாங்கினோம். பீஸ் இல்லயே தவிர அதுவும் மட்டன் பிரியாணி தான்.



மட்டன் மற்றும் சிக்கன் சுக்காவும் செமிகிரேவியா நாலைந்து பீசோட (எலும்புடன்) கொடுத்த காசுக்கு வொர்த்தா இருந்தது. சாயங்கால நேரத்துல பரோட்டாவும் சிக்கன் மஜுராவும் இங்க பிரபலம். சாப்பிட்ட பிறகு நாம தான் இலைய எடுத்து போடணும்.




இவர்கள் மாட்டுதாவணி பஸ் நிலையத்திற்கு எதிர்லயும் ஒரு கடை போட்டிருக்காங்க. மதுர வந்தா மறக்காம சாப்பிட்டு பாருங்க.

No comments:

Post a Comment