நண்பர்கள் குழுவுடன் உணவிற்காக சாலிகிராமம் நோக்கி ஒரு பயணம். பிரசாத் ஸ்டுதியோ பின்புறம் அமைந்திருக்கும் எல்.வி.பிரசாத் ரோட்டில் உள்ள ஏ.வி.கே மீன் உணவகத்திற்கு மதிய வேளையில் சென்றோம்.
கடை வாசலில் பலர் பார்சலுக்காக நின்றிருந்தனர். மிகச்சிறிய கடை. அங்கு அமர்ந்து சாப்பிட மூன்று டேபிள்கள் மட்டுமே உள்ளது. அதிகபட்சமாக பன்னிரன்டு பேர் மட்டுமே உட்கார்ந்து சாப்பிட முடியும். முக்கால் வாசி மக்கள் பார்சலுக்காக தான் வந்திருந்தனர். நாங்கள் நாலு பேரும் ஜன்னல் பக்கத்திலிருந்த டேபிளை தேர்வு செய்தோம்.
நாலு அளவு சாப்பாடு (70ரூ), வஞ்சிரம் வறுவல் (140ரூ) மற்றும் மத்தி வறுவல்
(4 பீஸ் 100ரூ) ஆர்டர் செய்தோம். மீன் விலை சந்தை விலையை பொருத்து
நாள்தோரும் வேறுபடும். ஒவ்வொறு நாளும் ஒவ்வொறு வகை மீன் கிடைக்கும்.
பெரும்பாலும் வஞ்சிரம் கிடைக்கும். நெறைய பேர் மீன் குழம்பும், மீன் வறுவல்
மட்டும் வீட்டிற்கு வாங்கி சென்றனர்.
சாதத்துடன் பீட்ரூத் கோஸ் பொரியல், கீரை கூட்டு மற்றும் அப்பளம் பறிமாரப்பட்டது. எடுத்த உடனே மீன் கொழம்பு தான் கேட்டோம். வஞ்சிரமும் மத்தி மீன் வறுவலும் சுடச்சுட அடுப்பில் இருந்த நேராக எங்கள் இலைகளுக்கு தாவின. இரண்டுமே நிறைவாக இருந்தன. பிறகு வஞ்சிரம் வறுவல் உடன் கொடுத்த மசாலாவை சாதத்துடன் சேர்ந்து சாப்பிட தாறுமாறு டேஸ்ட். கடைசியாக ரசம் விட்டு ஒரு பிடி படித்தோம்.
சாப்பிட்டு முடித்தவுடன் மோர் ஒரு கப் கொடுத்தார் உரிமையாளர் மகன். கூடவே விரைவில் ஏசி மயம் ஆக்கபோறோம்னு ஒரு தகவலும் தந்தார். வயிரும் மனமும் நிறைந்த மகிழ்ச்சியில் அங்கிருந்து விடை பெற்றோம்.
கூகிள் வரைபடம்:

No comments:
Post a Comment