Thursday, December 14, 2017

ஆப்பமும் கறிமீன் பொழிச்சதும்

சென்னை ராமாவரம் டி.எல்.எப் வளாகத்திற்கு எதிரே அமைந்திருக்கும் குமரகம் உணவகத்திற்கு இரவு உணவிற்காக அலுவலக நண்பருடன் செல்ல நேரிட்டது.


வழக்கம் போல சில ஆப்பங்களையும் (20₹) முட்டை கறியும் (70₹) கொண்டுவர உத்தரவித்தோம். நண்பரோ சிக்கன் சாப்பிட மாட்டார். நானோ பல கோழி பண்ணைகளை தின்றே அழித்தவன். ஆதலால் பொதுவான அபெடைசராக கறிமீன் பொழிச்சது(300₹) ஒன்றை கேட்டுவிட்டோம். வந்த மீனின் அளவிற்கும் விலைக்கும் சம்பந்தமே இல்லை. மிகச்சிறிய மீன். ஆனால் நல்ல மசாலாவுடன் வாழை இலையில் சுற்றி தவாவில் நன்றாக வறுக்கப்பட்டு அட்டகாசமான சுவை. வாழை இலை சுத்தமாக தொடைக்கப்பட்டது என்பதை சொல்லித்தெரிய வேண்டியதில்லை.






ஆப்பம் வழமையான சுவை. முட்டை கறி இரண்டு முழு முட்டைகளுடன் லேசான புளிப்பான கிரேவி, இருவருக்கு சரியாக இருந்தது. இனி வந்தால் மீன் அளவை தெரிந்த கொள்ளாமல் ஆர்டர் செய்யப் போவதில்லை என்று முடிவெடுத்து புகார் தெரிவித்து விட்டு கிளம்பினோம்




கூகிள் வரைபடம்:

No comments:

Post a Comment