Monday, December 11, 2017

மதுரை வெண்ணை ரொட்டி

மேல மாசி வீதியில் இருந்து பாண்டிய வெள்ளாளர் தெருவில் செல்கையில் தெற்கு வெளி வீதி சந்திப்பில் உள்ள ஒரு தேனீர் விடுதியில் மாலை நேரங்களில் சுடச்சுட வெண்ணை ரொட்டி (15ரூ) சமைத்து தரப்படும். இன்று மாலை இரண்டு வெண்ணை ரொட்டிகளை வீட்டிற்கு வாங்கினேன்.



ரொட்டியினை இரண்டாக வெட்டி நடுவில் வெண்ணையை தடவி பின்னர் சூடான கல்லில் வைத்து மேலும் கீழும் இன்னொரு முறை வெண்ணை தடவி ரெண்டு திருப்பு திருப்பி மேலாக சர்க்கரை வைத்து வாழை இலையில் கெட்டித்தந்தார்கள்.




வீட்டிற்கு சென்று சூடான வெண்ணை ரொட்டியினை ஒரு விள்ளல் எடுத்து சாப்பிட்டால் எ பியூர் பிளிஸ்




No comments:

Post a Comment