Tuesday, March 27, 2018

மாலை டிபன் at நியூ குறிஞ்சி உணவகம்


 

மாலையில் நாங்கள் தங்கியிருக்கும் குரு விடுதியில் இருந்து வெளியே செல்வதற்கு முன்பு விடுதி அமைந்துள்ள கட்டிடத்தின் கீழ் தளத்தில் உள்ள குறிஞ்சி உணவகத்திற்கு செல்வதாக முடிவாகியது.


என்ன வேண்டும் என கேட்பதற்கு முன்னரே வாழை இலை வைத்தார் சர்வர். மினி வடைகளும் (20₹) இனிப்பு பனியாரமும் (35₹) முதலில் ஆர்டர் செய்தோம்.
சிறு வடைகள் சென்னையில் கிடைக்கும் மைசூர் போண்டாவின் மினி வெர்சன். ஒரு பிளேட்டில் பத்து வடைகள். அதனுடன் மூன்று வதமான சட்னிகளும் சிறு சட்டியில் சாம்பாரும் பறிமாறப்பட்டது. வடையை ஒரு விள்ளல் எடுத்து சாம்பாரில் ஒரு முக்கு முக்கி சட்னி தொட்டு சாப்பிட்டால் அட்டகாசமான சுவை. இனிப்பு பனியாரம் மிதமான இனிப்புடன் நன்றாகவே இருந்தது. ஆனால் இரண்டிற்கு மேல் சாப்பிட முடியவில்லை.




கடைசியில் வரப்பட்ட பில்டர் காபி(22₹) சிறு கசப்புடன் அருமை. இதற்கு முன்பு இப்பகுதியில் அதிக முறை சங்கீதா உணவகத்தற்கு தான் சென்றிருந்தோம். மத்திய பேருந்து நிலையத்திற்கு அருகாமையில் அமைந்திருந்தாலும் நாங்கள் இந்த ட்ரிப்பில் தான் இங்கு உணவருந்த வாய்ப்பு கிடைத்தது.




உணவு பொருட்களின் விலையை பொருத்தவரை திருச்சி எப்போதுமே சென்னைவாசிகளுக்கு ஒரு இன்ப அதிர்ச்சியை தரும். இம்முறையும் அவ்வாறே நிகழ்ந்தது.

கூகிள் வரைபடம்:

 

No comments:

Post a Comment