Tuesday, March 27, 2018

ஹோட்டல் கண்ணப்பா


ஒரு திருமணத்திற்காக திருச்சி வர நேரிட்டது. நேற்று முழுவதும் கோவில் கோவிலா சுத்துனதுல சரியா சாப்பிட்டமுடியவில்லை. இன்று காலை ஓலா ரெண்டல் ஸைலோ புக் செய்து உத்தமர் கோவிலில் ஆரம்பித்து சமயபுரம் மாரியம்மன் வரை தரிசித்து கடைசியாக மதிய உணவிற்காக மன்னர்புரத்தில் உள்ள ஹோட்டல் கண்ணப்பா வந்தடைந்தோம்.



ஸ்டார்டருக்கு ஒரு ஒன் பை டூ பெப்பர் சிக்கன் சூப்பும்(75₹) சிக்கன் கபாப்(180₹), பிஷ் பிங்கர்ஸ்(200₹) மற்றும் பார்பகூ பிஷ்(220₹). சூப் சொல்லிக்கற மாதிரி இல்லை. ஆர்டர் செய்யாமலே இருந்திருக்கலாம். சிக்கன் கபாப் தந்தூரியில் சமைத்தது, நன்றாகவே இருந்தது. பிஷ் பிங்கர்ஸும் பார்பகூ இரண்டுமே செம. விலையும் அதிகமில்லை. குழந்தைகளுக்கு ஏற்ற ஸ்டார்டர்ஸ்.





மெயின் டிஷ்ஷாக இரண்டு வகையான மட்டன் பிறியாணி...சீரக சம்பா(180₹) மற்றும் பாஸ்மதி(190₹) அரிசியால் செய்யப்பட்டது. உடன் கத்தரிக்காய் தால்சாவும் தயிர் பச்சதி. பீஸ் ஒவ்வொன்றும் நன்றாக இருந்தது. பிறியாணி மிக சிறப்பென்று சொல்ல இயலாது. ஆனால் மற்றவர்கள் விரும்பி உண்டனர். ஜுனியர் குப்பண்ணாவிலும் தலைப்பாகத்தியிலும் சாப்பிட்டு என் நாக்குதான் மறத்து விட்டடோ என்னவோ.







இதைவிட திருச்சி ஜங்குசன் பக்கத்தில் இருக்கும் திண்டுக்கல் பிறியாணி(சாலையோர உணவகம்) நன்றாக இருக்கும் என்று கேள்விப்பட்டேன். ஆனால் குடும்பமாக ஊருக்கு உள் நுழையாமல் செல்ல திருச்சி பைபாஸில் அமைந்திருக்கும் கண்ணப்பா ஓர் சிறந்த உணவகமே. டவுன் உள்ள போனால் பனானா லீப் இதைவிட அருமையாக இருக்கும்.

கூகிள் வரைபடம்:

 

No comments:

Post a Comment