முதல் மாடியில் உணவகமும் தரை தளத்தில் பார்சலும் கிடைக்குமாறு அமைத்திருந்தனர். நாங்கள் டோக்கன் வாங்கி கொண்டு அரை மணி நேர காத்திருத்தலுக்கு பிறகு உள் அழைக்கப்பட்டோம். சென்னையில் டோக்கன் வாங்கி நான் உணவருந்திய ஒரே உணவகம் இது மட்டுமே.
ஆரம்ப உணவாக அரை ப்ளேட் ரேஷ்மி கபாப்(160₹) மற்றும் முக்கிய உணவாக ஒரு முழு மட்டன் பிரியாணியும்(315₹) ஆர்டர் செய்தோம். மறுபடியும் அரை மணி நேர காத்திருப்பு. முதலில் வந்த சிக்கன் கபாப் பார்த்தவுடன் பெரும் ஏமாற்றம். வெறும் நான்கு சிறிய துண்டுகள். ஆனால் சாப்பிட்ட பிறகு பரம திருப்தி. மிக மிருதுவான சிக்கன் பீஸ்கள்...குங்குமப்பூ நீரில் மேரினேட் செய்து அருமையாக செய்திருந்தார்கள்.
அடுத்து ஒரு முர்க் சர்பியா காளிமிச்சி(187₹)....தமிழில் சொல்லனும்னா ஏலக்காய் மற்றும் சிகப்பு மிளகாய் கலந்த தந்தூரி அடுப்பில் சுட்டெக்கப்பட்ட காரமில்லாத இரு சிக்கன் லெக் பீஸ்கள். சொர்கம்னா என்னன்னு எனக்கு உணர்த்தியது.
கடைசியாக மெயின் டிஷ்ஷான முழு மட்டன் பிரியாணி வந்தது. மசாலா சற்று அதிகம், ஆனால் ஒவ்வொரு மட்டன் பீஸும் ரிச்சான நறுமணத்தோடு (ரோஸ் வாட்டர் ?) அருமையான சுவையோடு இருந்தது.
பசி அடங்காதாலால் கடைசியாக ஒரு சிங்கிள் மட்டன பிரியாணி(192₹) ஆர்டர் செய்ய வேண்டியதாகிவிட்டது. பிரியாணியுடன் மசாலா மோரும் வெங்காய ஸ்லைஸும் கிரேவியும் கிடைத்து. அந்த மோரை கடைசியில் குடிக்க குடிக்க ஆனந்தம்.
சென்னை மக்களுக்கு இந்த வகை பிரியாணி பிடிக்குமா என்று தெரியவில்லை. ஆனால் ஒரு முறையேனும் செல்லலாம்.
கூகிள் வரைபடம்:









No comments:
Post a Comment