Tuesday, March 27, 2018
பூர்வீக மயில் மார்க் மிட்டாய் கடை
தொதல் அல்வா கேள்வி பட்டிருக்கீங்களா? நேற்றிரவு தான் முதன் முதலில் சுவைக்க நேர்ந்தது.
நேற்று இரவு மைத்துனருடன் மத்திய பேருந்து நிலையத்திலிருந்து திருச்சி சந்திப்பு வரை ஒரு நடை. சந்திப்பு செல்லும்முன் மயில் மார்க் மிட்டாய் கடையில் நண்பனுக்காக இனிப்பு பலகாரங்கள் வாங்க சென்றோம்.
அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் பலகாரங்களில் இருவகையான அல்வா. தொதல் மற்றும் பருத்தி அல்வா. இரு வகைகளும் கிலோ முன்னூறு ரூவா. தொதல் என்பது இலங்கையில் இருந்து வந்த முஸ்லிம் இன மக்கள் மூலமாக இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை என்னும் ஊரில் பிரசித்தம். இது கருப்பட்டி, தேங்காய் பால் மற்றும் ஜவ்வரிசி கொண்டு செய்யப்படும்.
பருத்தி அல்வா என்பது பருத்தி பால் மற்றும் கருப்பட்டி கொண்டு செய்யப்படுவது. தொதல் நம்ம திருநெல்வேலி அல்வா போன்ற அமைப்பிலும் பருத்தி அல்வா சற்று திடமாகவும் இருந்தன. திருச்சி வந்தால் தவறாமல் செல்ல வேண்டிய கடை "பூர்வீக மயில் மார்க் மிட்டாய் கடை".
கூகிள் வரைபடம்:
Subscribe to:
Post Comments (Atom)








No comments:
Post a Comment