பிக் பஜார் பக்கத்தில் உள்ள சிங்கார வேலன் தெருவில் புதிதாக திறக்கப்பட்ட பட்டுக்கோட்டை காமாட்சி மெஸ் தான் நாங்கள் சென்ற இடம். இங்கு ஸ்பாசாலிட்டியே சாப்பாட்டுடன் பறிமாரப்படும் வித விதமான தொக்கு மற்றும் கொழம்பு வகைகள்.
இருவருக்கும் மீன் வருவல் சாப்பாடு (299₹), கரண்டி ஆம்ளெட்(60₹) மற்றும் கோழிக்கறி ஆம்ளெட்(150₹) ஆர்டர் செய்தோம். முதலில் வாழை இழை வைத்து கத்திரிக்காய் பொரியல், புடலங்காய் கூட்டு, நெத்திலி கருவாடு தொக்கு, சில சிறு வெங்காயம் மற்றும் அரை லிட்டர் பிஸ்லரி வாட்டர் பாட்டில் பறிமாரப்பட்டது. பிறகு சிறிதளவு சாதம் வைத்து சிக்கன் தொக்கு வைத்தார்கள்.
முதலில் சாதத்தின் அளவை பார்த்து நண்பன் கிண்டல் செய்தான். ஆனால் அதன்பிறகு காடை தொக்கு, இரால் தொக்கு, நண்டு தொக்கு, மட்டன் கொழம்பு, எலும்பு கொழம்பு, நாட்டு கோழிக் கொழம்பு என்று வரிசையாக சாதத்துடன் வைக்கப்பட பயபுள்ள டரியளாகி விட்டான். கூடவே ஒரு பெரிய மொருகலான வஞ்சிரம் வருவல்
கடைசில பய சர்வரை பார்த்து என்னைய விட்டுங்கனு கெஞ்ச ஆரம்பித்தான். ஆனாலும் சளைக்காம சிறு மண் பானையில் தயிரும் ஒரு கப் நிறைய கோதுமை ரவா பாயசம் வைத்தார்கள். கடைசியில் நான்தான் அதை முடிக்க வேண்டியதையாகிவட்டது.
கரண்டி ஆம்ளெட் மற்றும் கறி ஆம்ளெட் சிறு வெங்காயத்துடன் செய்திருந்தார்கள், இரண்டுமே அருமை. நண்டு மற்றும் இறால் தொக்கை தவிர அனைத்தும் தாருமாறு லெவல். ஆனால் ஒரு கட்டத்தில் பல வகை கொழம்பை சாப்பிட்டு நாக்கே மறத்துவிட்டது. அதனால் ரசத்தோடு முடிக்க நினைத்தேன். ஆனால் தயிர் வேறு வைத்ததால், அதை மட்டும் சாதமில்லாமல் சாப்பிட்டு முடித்தேன். பாயசம் வித்தியாசமாக இருந்தாலும் ரெண்டு ஸ்பூனுக்கு மேல சாப்பிட வயிற்றில் இடமில்லை.
நல்ல பசியோட போனால் செமயா விளையாடலாம். இல்லனா கொஞ்சம் காஸ்ட்டிலியா நினைக்க தோன்றும்.
கூகிள் வரைபடம்:











Planning to go soon and try the sea food varieties.
ReplyDeleteHappy to know that you've enjoyed the food over there.
Delete